Sep 23, 2026
Thisaigal NewsYouTube
வெற்றி பெற்றால் கேஎப்சி, ஃபேமிலிமார்ட் கொண்டு வருவேன் – பெர்சாத்து வேட்பாளரின் கவர்ச்சிகரமான வாக்குறுதி
அரசியல்

வெற்றி பெற்றால் கேஎப்சி, ஃபேமிலிமார்ட் கொண்டு வருவேன் – பெர்சாத்து வேட்பாளரின் கவர்ச்சிகரமான வாக்குறுதி

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் ஜுவாசே தொகுதியில் பெர்சாத்து கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரான ஜூஹைமி முகம்மது யூசோப், தாம் வெற்றி பெற்றால் அந்தப் பகுதியில் கேஎப்சி, ஃபேமிலிமார்ட், சி மார்ட் போன்ற பிரபல உணவக மற்றும் சில்லறை வர்த்தக நிறுவனங்களை கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

தற்போது கேஎப்சியில் சாப்பிட வேண்டுமென்றால் இங்குள்ள இளைஞர்கள் பஹாவ் அல்லது கோலா பிலா செல்ல வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஜூஹைமி, தாம் வெற்றி பெற்றால் இளைஞர்கள் விரும்பும் பிரபல நிறுவனங்களை இப்பகுதிக்குக் கொண்டு வர முயற்சிப்பதாக நேற்று அப்பகுதியில் பெர்சாத்து பொதுச்செயலாளர் அஸ்மின் அலியுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், முதலீட்டாளர்கள் முன்வரவில்லை என்றால், தனது சொந்த பணத்திலேயே அந்த நிறுவனங்களைத் தொடங்கத் தயாராக இருப்பதாகவும் ஜூஹைமி உறுதியளித்துள்ளார்.

Related News