Oct 22, 2025
Thisaigal NewsYouTube
அரசியல்

பொங்கல் பொருட்கள், உணவுப் பொருட்கள் அடங்கிய கூடைகளை வழங்கினார்

Share:

ஜன 12

நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினரும் Repah சட்டமன்ற உறுப்பினருமான திரு. வீரப்பன் சுப்பிரமணியம், பொங்கல் திருநாளை முன்னிட்டு 300 வறிய நிலை குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள், உணவுப் பொருட்கள் அடங்கிய கூடைகளை வழங்கினார். Repah சட்டமன்றத் தொகுதி மக்கள் சேவை மையத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், Repah தொகுதியில் உள்ள 200 கோவில்களுக்கும் அரசு சாரா அமைப்புகளுக்கும் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம் கல்வித் துறையில் மேற்கொள்ளும் பல்வேறு உதவிகள் குறித்து வீரப்பன் விளக்கினார். Bantuan Anak Sekolah , Bantuan Anak Negeri , இளங்கலை பயிலும் மாணவர்களுக்கு ஆயிரம் ரிங்கிட் உதவுத் தொகை, டிப்ளோமா பயிலும் மாணவர்களுக்கு 750 ரிங்கிட் உதவித் தொகை, சான்றிதழ் நிலை மாணவர்களுக்கு 500 ரிங்கிட் உதவித் தொகை, STEM மாணவர்களுக்கு 1500 உதவித் தொகை, 500 முதல் நிலை தேர்ச்சி பெற்ற பட்டையக் கல்வி மாணவர்களுக்குகான உதவித் தொகை, ஒவ்வோர் ஆண்டும் 500 மடிக்கணினி உதவி, படிவம் 6 மாணவர்களுக்கு இணைய வசதி கருவி பற்றியும் அவர் குறிப்பிட்டார். பாஸ்டர் ராமன் மற்றும் மக்கள் சேவை மைய அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!