கோலாலம்பூர், டிசம்பர்.23-
முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் ரசாக்கின் வீட்டுக் காவல் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, டிஏபி ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் டோனி புவா, நஜீப்பின் ஆதரவாளர்களைக் கடுமையாகச் சாடி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நஜீப்பின் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டதைக் கண்டு உச்சிக் குளிர்ந்துள்ள தங்களைச் சாடி வரும் அம்னோ தலைவர்களுக்கு டோனி புவா பதிலடி கொடுள்ளார். நஜீப்பை ஆதரிக்கும் அம்னோ ஆதரவாளர்கள், ஒரு மோடிக்காரரரை நேசிக்கும் விசுவாசிகள் என்று டோனி வர்ணித்துள்ளார்.
டோனி புவாவின் இந்த கடும் அறிக்கை அம்னோவிற்கும், ஜசெக.விற்கும் மேலும் விரிசலை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
நஜீப் சிறையில் அடைக்கப்பட்டதில் தானும், தனது கட்சியும் முக்கியப் பங்காற்றியதில் பெருமைப்படுவதாக டோனி புவா குறிப்பிட்டுள்ளார்
அரசாங்கம் மற்றும் மக்கள் பணத்தை கபளிக்கரம் புரிந்தவர்களுக்கு அனுதபாம் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று டோனி புவா, தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்
மோசடிப் புரிந்தவர்களைத் தொடர்ந்து நேசிக்கும் யாரையும் நாங்கள் தடுக்கவில்லை. ஆனால், நீதி நிலைநாட்டப்பட்டதை கண்டு மற்ற மலேசியர்கள் கொண்டாடுவதை யாரும் தடுக்கக்கூடாது என்று டோனி புவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.








