கோலாலம்பூர், செப்டம்பர்.07-
பெர்சத்து கட்சியின் தலைவரான டான் ஶ்ரீ முஹைதீன் யாசீனைப் பதவியிலிருந்து நீக்க எந்த வழியும் இல்லை என அர்மாடா பெர்சத்து கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது. சில வாரங்களுக்கு முன், முஹைதீனுக்கு எதிராகச் சத்தியப் பிரமாண வாக்குமூலங்கள் வெளியிடப்பட்டதால், அவரது தலைமைக்குப் பெரும் சவால் ஏற்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு நடந்த கட்சியின் பொதுத் தேர்தலின்போது முஹைதீன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், அவரது பதவிக் காலம் 2027-ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என்றும் அக்கட்சியின் தகவல் தொடர்புப் பிரிவின் தலைவர் ஹரிஸ் இடஹாம் ரஷிட் தெரிவித்தார். எனவே, எந்தவொரு சத்தியப் பிரமாணமும் அவரைப் பதவியிலிருந்து நீக்காது என அர்மாடா திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இதனால், பெர்சத்து கட்சிக்குள் நடக்கும் அதிகாரப் போர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.