கோலாலம்பூர், டிசம்பர்.09-
சபா அம்னோ தலைவர் புங் மொக்தார் ராடின் காலமானதைத் தொடர்ந்து அவரின் எம்.பி.யாக இருந்த கினபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த லாமாக் தொகுதி ஆகிவற்றில் இடைத் தேர்தல் நடத்துவது குறித்து வரும் டிசம்பர் 16 ஆம் தேதி மலேசிய தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் சிறப்புக் கூட்டத்தை நடத்தவிருக்கிறது.
இவ்விரு தொகுதிகளும் காலியாகி இருப்பது குறித்து மக்களவை சபாநாயகர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் மற்றும் சபா சட்டமன்ற சபாநாயகர் டத்தோ காட்ஸிம் எம் யாஹ்யா தங்களிடம் அதிகாரப்பூர்வமாகத் தெரியப்படுத்தியிருப்பதாக எஸ்பிஆர் செயலாளர் கைரில் ஷாரில் இட்ருஸ் தெரிவித்தார்.








