பெட்டாலிங் ஜெயா, மே 28-
மலேசியாவில் கருத்து சுதந்திரம் இல்லை என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது குற்றஞ்சாட்டியுள்ளார். மலேசியர்கள் தங்கள் எண்ண அலைகளை அல்லது கருத்துகளை சொல்வதற்கு வாய்ப்பில்லை. அவர்களுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.
சட்ட ஒழுங்கை மீறியவர்கள், மக்கள் சுதந்திரமாக தங்கள் கருத்துகளை சொல்வதற்கும், எந்தவொரு அறைகூவலையும் விடுப்பதற்கு தடைவிதிக்கின்றனர்.
எந்த வகையிலும் அவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லக்கூடாது என்று அவர்களுக்கு நெருக்குதல் அளிக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகி விட்டதாக துன் மகாதீர் குற்றஞ்சாட்டியுள்ளார்.








