பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 21-
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு அதன் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் போட்டியிடவிருக்கிறார்..
இன்று காலை 11 மணியளவில் பெர்சத்து கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற வேட்புமனுத்தாக்கலின் போது லாருட் எம்.பி.யான ஹம்ஸா ஜைனுதீன் , கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனுத்தாக்கல் பாரத்தை சமர்ப்பித்துள்ளதாக அவரின் உதவியாளர் உறுதிப்படுத்தினார்.
ஹம்ஸா ஜைனுதீன் துணைத் தலைவர் பதவிக்கு குறிவைத்திருப்பது மூலம் அவர் கட்சியின் நடப்பு துணைத் தலைவரான டத்தோஸ்ரீ அகமது பைசல் - லை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.








