Dec 20, 2025
Thisaigal NewsYouTube
அப்துல் ஹாடி அவாங்கிடம் வாக்குமூலம் பதிவு
அரசியல்

அப்துல் ஹாடி அவாங்கிடம் வாக்குமூலம் பதிவு

Share:

கோலாலம்பூர், டிச. 20-


புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் விசாரணைக்கு ஆளாகியுள்ள பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் இன்று உறுதிபடுத்தியுள்ளார்.

இஸ்லாத்தின் உயரம் கட்டாயம் தற்காக்கப்பட வேண்டும் என்ற தலைப்பில் ஹாடி அவாங் வெளியிடுள்ள ஓர் அறிக்கை தொடர்பில் இந்த விசாரணை நடைபெற்று வருவதாக ஐஜிபி தெளிவுபடுத்தினார்.

ஹாடி அவாங் மீதான விசாரணையை விரைவில் முடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் விசாரணை அறிக்கை தயாரானதும் அநேகமாக இன்று சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படலாம் என்று டான்ஸ்ரீ ரஸாருடின் குறிப்பிட்டார்.

Related News