Oct 24, 2025
Thisaigal NewsYouTube
தேர்தலுக்காக எஸ்.ஓ.பி நடைமுறைகள்
அரசியல்

தேர்தலுக்காக எஸ்.ஓ.பி நடைமுறைகள்

Share:

அடுத்த மாதம் 12 ஆம் தேதி ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் மற்றும் கோல திரங்கானு நாடாளுமன்ற இடைதேர்தல் ஆகியவற்றை முன்னிட்டு கோவிட் 19 தடுப்பிற்கு கடைப்பிடிக்கப்பட வேண்டிய குறிப்பிட்ட எஸ்.ஓ.பி நடைமுறைகளை சுகாதார அமைச்சு அறிவிக்கவிருப்பதாக அதன் அமைச்சர் டாக்டர். ஜாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட எஸ்.ஓ.பி நடைமுறைகளை மேம்ப்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சு விரைவில் தேர்தல் ஆணையமான எஸ்.பி.ஆர் -ரை சந்திக்க விருப்பதாக அமைச்சர் டாக்டர். ஜாலிஹா முஸ்தபா குறிப்பிட்டார்.

இந்த எஸ்.ஓ.பி நடைமுறைகள் குறித்து, வாக்களிப்புத் தினத்திற்கு முன்னதாகவே கலந்து ஆலோசிக்கப்பட்டு, முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் விளக்கினார்.

கிளந்தான், கோத்தாபாருவில், மாநில சுகாதார இலாகாவின் சிறந்த சேவைக்கான விருதளிப்பு நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டாக்டர். ஜாலிஹா முஸ்தபா இதனை தெரிவித்தார்.

இன்னும் இரண்டு மூன்று தினங்களில் தேர்தலுக்கான எஸ்.ஓ.பி நடைமுறைகள் தீர்க்கமாக முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் விளக்கினார்.

Related News