நவம்பர்- 10
உரிம நோக்கங்களுக்காக மலேசிய தகவல் தொடர்பு , பல்லூடக ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டியதற்கு முன்பு, நடத்தை விதிகள் குறித்து கருத்துக்களை வழங்க சமூக ஊடக தள வழங்குநர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் இஃது இறுதி செய்யப்பட்ட பிறகு, நடத்தை விதிகள் வெளியிடப்படும் என்றும், மலேசியாவில் எட்டு மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட அனைத்து சமூக ஊடக தள வழங்குநர்களும் பதிவு செய்ய வேண்டும் என்றும் தகவல் தொடர்பு அமைச்சர் Fahmi Fadzil கூறினார்.
இவ்விவகாரத்தில் இரு வழி விவாதம் ஏதும் இல்லை, அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே பதிவு செய்யப்படும், அனுமதி வழங்கப்படும். குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்யத் தவறினால் அபராதம் விதிக்கப்படுவது உட்பட கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.
இதுவரை, பெரும்பாலான சமூக ஊடக தள வழங்குநர்கள் சம்பந்தப்பட்ட நடத்தை விதிகள் குறித்து கருத்துக்களை வழங்குவதில் ஒத்துழைத்து வருவதாக அவர் Fahmi Fadzil கூறினார்.








