Dec 22, 2025
Thisaigal NewsYouTube
பக்காத்தான் ஹாராப்பான் - தேசிய முன்னணி இடையிலான ஒத்துழைப்பை சோதிக்கும் களமாக சுங்கை பக்காப் இடைத்தேர்தல் விளங்குகின்றது
அரசியல்

பக்காத்தான் ஹாராப்பான் - தேசிய முன்னணி இடையிலான ஒத்துழைப்பை சோதிக்கும் களமாக சுங்கை பக்காப் இடைத்தேர்தல் விளங்குகின்றது

Share:

சிலாங்கூர், ஜூன் 04-

சிலாங்கூர், கோல குபு பாரு சட்டமன்ற தொகுதியை வென்றிருந்தாலும், பக்காத்தான் ஹாராப்பான் - தேசிய முன்னணி இடையிலான ஒத்துழைப்பை உண்மையில் சோதிக்கக்கூடிய களமாக, பினாங்கு, சுங்கை பக்காப் இடைத்தேர்தல் விளங்கவுள்ளதாக, மலேசிய அறிவியல் பல்கலைக்கழக விரிவுரையாளர் டாக்டர் ஜஹாருல் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கி, பக்காத்தான் ஹாராப்பான் வசமிருந்த சுங்கை பக்காப் தொகுதி, கடந்தாண்டு நடைபெற்ற பினாங்கு சட்டமன்ற தேர்தலில் PAS கட்சி வசமானது.

தேசிய முன்னணியின் வாக்காளர்கள் தங்களது ஆதரவை பெரிக்காதான் நசியனால்-லுக்கு வழங்கியதால், பக்காத்தான் ஹாராப்பான் அந்த தொகுதியை இழந்திருந்தது.

இம்முறை, தேசிய முன்னணி - பக்காத்தான் ஹாராப்பான்-னின் ஒத்துழைப்பு மற்றும் அடைவுநிலையை மதிப்பிடக்கூடிய அளவுகோலாக சுங்கை பக்காப் இடைத்தேர்தல் விளங்கவுள்ளது.

பெரிக்காதான் நசியனால்-லின் பச்சை அலை என அப்படி ஒன்றும் இல்லை என்பதை அவ்விரு கூட்டணிகளும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றாரவர்.

குறிப்பாக, வரக்கூடிய இடைத்தேர்தலில் வெற்றி கிடைக்க வேண்டுமானால், இஸ்லாம் சமயத்தை தற்காக்கும் கடப்பாட்டில் நடப்பு அரசாங்கம் உறுதியாக உள்ளது போன்ற நம்பிக்கை, மலாய்க்காரர்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும்.

அது தவிர, இலக்கிடப்பட்டவர்களுக்கு மட்டுமே டீசலுக்கான உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பால், வாழ்க்கை செலவின அதிகரிப்பு ஏற்படாது என்ற நம்பிக்கையையும் மக்களிடம் ஏற்படுத்துவது அவசியம் என டாக்டர் ஜஹாருல் அப்துல்லா கூறினார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்