Oct 17, 2026
Thisaigal NewsYouTube

சனூசி விண்ணப்பம்: இன்னும் முடிவு செய்யப்படவில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சனூசி விண்ணப்பம்: இன்னும் முடிவு செய்யப்படவில்லை

ஷா ஆலாம், நவ.6-

தேச நிந்தனைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள கெடா மந்திரி பெசார் சனூசி நோர், தனக்கு எதிரான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்யக்கோரி, சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ள பிரதிநிதித்துவ மனு குறித்து இன்னும் முடிவு காணப்படவில்லை என்று ஷா ஆலாம் உயர்நீதிமன்றத்தில் இன்று காலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனூசியின் பிரதிநிதித்துவ மனு மீதான விண்ணப்பம், சட்டத்துறை அலுவலகத்தில் இன்னமும் பரிசீலனையில் இருந்து வருகிறது. எனவே இது குறித்து பரிசீலனை செய்வதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுகிறது என்று அரசு தரப்பில் ஆஜராகியுள்ள துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அப்துல் மாலிக் அயோப் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி அஸ்லாம் ஸைனுதீன், மந்திரி பெசார் சனூசி மீதான வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

அதேவேளையில் சனூசிக்கு எதிரான தேச நிந்தனை குற்றச்சாட்டு மீதான வழக்கு விசாரணையை ஒத்திவைப்பது, இதுவே கடைசி முறையாகும் என்ற நினைவுறுத்தலையும் நீதிபதி வழங்கினார்.

கடந்த ஆண்டு ஜுலை மாதம், சிலாங்கூர், கோம்பாக்கில் சிலாங்கூர் ஆட்சியாளருக்கு எதிராக நிந்தனை தன்மையில் தாம் ஆற்றிய உரைக்காக மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரபுடீன் இட்ரிஸ் ஷா விடம், கடந்த செப்டம்பர் மாதம் சனூசி பகிரங்க மன்னிப்புக்கோரினார்.

தம்முடைய இந்த செயலுக்காக மிக வருத்தத்தில் இருப்பதாகவும், ஆட்சியாளர்கள் மீதான மரியாதையை நிலைநிறுத்தும் மலாய் பாரம்பரிய பழக்கவழக்கங்களுக்கு இணங்க, இனி அறிக்கை வெளியிடுவதில் தாம் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பதாக சனூசி தமது பகிரங்க மன்னிப்பில் கோரியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
நெகிரி செம்பிலான் சட்டமன்றக் கூட்டம் ஒத்திவைப்பு: மந்திரி பெசாரிடம் விளக்கம் கோருகிறது பிகேஆர்

நெகிரி செம்பிலான் சட்டமன்றக் கூட்டம் ஒத்திவைப்பு: மந்திரி பெசாரிடம் விளக்கம் கோருகிறது பிகேஆர்

நெகிரி செம்பிலான் அரசியலமைப்பு நெருக்கடி: மாநில ஆட்சியாளர், மந்திரி பெசாரிடம் கடும் அதிருப்தி

நெகிரி செம்பிலான் அரசியலமைப்பு நெருக்கடி: மாநில ஆட்சியாளர், மந்திரி பெசாரிடம் கடும் அதிருப்தி

மலாக்கா தேர்தல்: பிகேஆர் 9 தொகுதிகளில் போட்டி; 24ஆம் தேதி வேட்பாளர்கள் அறிவிப்பு

மலாக்கா தேர்தல்: பிகேஆர் 9 தொகுதிகளில் போட்டி; 24ஆம் தேதி வேட்பாளர்கள் அறிவிப்பு

நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரம்: அரசியலாக்க வேண்டாம் – ஆட்சியாளர்களின் உத்தரவுக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவு

நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரம்: அரசியலாக்க வேண்டாம் – ஆட்சியாளர்களின் உத்தரவுக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவு

நெகிரி செம்பிலானின் 17ஆவது ஜெலுபு உண்டாங்-ஆக அஸ்ரின் கைரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நெகிரி செம்பிலானின் 17ஆவது ஜெலுபு உண்டாங்-ஆக அஸ்ரின் கைரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பெரிக்காத்தான் நேஷனல் மீதான தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு

பெரிக்காத்தான் நேஷனல் மீதான தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு