டிச. 15-
சரவாக் மாநிலத்தில் மத்திய அரசின் 11 திட்டங்கள் முடங்கியதற்கு முக்கிய காரணம் குத்தகையாளர்கள் எதிர்கொள்ளும் நிதிப் பிரச்சினைகள் என்று துணை பிரதமர் Fadillah Yusof கூறினார். அவை கல்வி, சுகாதாரம் , புறநகர் மேம்பாடு போன்ற துறைகளை உள்ளடக்கியவை. கோவிட்-29 பெருந்தொற்று, வடிவமைப்பு பிரச்சினைகள் போன்ற பிற காரணங்களும் இந்தத் திட்டங்கள் முடங்கியதற்கு காரணமாகும் என்றார்.
அரசாங்கம் இந்தத் திட்டங்களை முடிக்க புதிய குத்தகையாளர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. மேலும், குத்தகையாளர்கள் தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொண்டால், இந்த பிரச்சினையை தீர்க்க மத்திய, மாநில நிலை நிறுவனங்கள் ஒன்றாக உதவ முடியும் என்பதை விவாதிக்க வேண்டும் என்று Fadillah கூறினார்.
கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்படுவதற்கு முன் அனுமதிக்கப்பட்டத் திட்டங்கள் மறுபரிசீலனை செய்யப்படும். அங்கீகரிக்கப்பட்டத் திட்டத்தின் நோக்கம் மாறுபடுதல், செலவு அதிகரித்தல் போன்ற கோணங்களில் அவை ஆராயப்படும் என்றும் அவர் கூறினார். அடுத்த மலேசியத் திட்டம் வரை அதன் செயல்பாட்டை ஒத்திவைக்க வேண்டியிருக்கும். அதே சமயம், 2019 இல் அங்கீகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டைக் கொண்டு முடங்கியத் திட்டங்களை முடிக்கப் பயன்படுத்தப்படும் எனவும் Fadillah மேலும் சொன்னார்.








