Jun 25, 2026
Thisaigal NewsYouTube
ஈரான் - இஸ்ரேல் பதற்றத்தைத் தணிக்க இந்தோனேசியாவின் முயற்சிக்கு மலேசியா ஆதரவு
அரசியல்

ஈரான் - இஸ்ரேல் பதற்றத்தைத் தணிக்க இந்தோனேசியாவின் முயற்சிக்கு மலேசியா ஆதரவு

Share:

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலைக் குறைக்கவும், மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டவும் இந்தோனேசியா எடுத்து வரும் தூதரக முயற்சிகளுக்கு மலேசியா தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ- வுடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொலைபேசி வாயிலாக உரையாடினார். அந்த உரையாடலில்,/ பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கவும், போர்ப் பதற்றத்தைத் தணித்து அமைதியை ஏற்படுத்தவும் இரு தலைவர்களும் கூட்டாக அழைப்பு விடுத்தனர்.

தனது முகநூல் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள பிரதமர் அன்வார், "அமைதி மற்றும் மோதல் தீர்வை நோக்கிய இந்தோனேசியாவின் அனைத்து முயற்சிகளையும் மலேசியா ஆதரிக்கிறது" என்று தெரிவித்தார். மேலும், இந்த முயற்சிகள் ஆசியாவில் நிரந்தர அமைதிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் தவிர, மலேசியா - இந்தோனேசியா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர். இதன் ஒரு பகுதியாக, விரைவில் ஜா கார்த்தாவிற்குப் பயணம் மேற்கொண்டு அதிபர் பிரபோவோவை நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

Related News