பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி.19-
மஸ்ஜிட் தானா நாடாளுமன்ற உறுப்பினர் மாஸ் எர்மியாத்தி ஷம்சுடின், மஸ்ஜிட் தானா பெர்சத்து தொகுதித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து மஸ்ஜிட் தானா பெர்சத்து கட்சியின் முன்னாள் செயலாளர் ஷாருல் அஸார் அமீர் விடுத்துள்ள அறிக்கையில், இன்று நடைபெற்ற தொகுதி ஆலோசனைக் கூட்டத்தின் போது மாஸ் எர்மியாத்தி தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்ததாகத் தெரிவித்தார்.
அவருடன் இணைந்து கட்சியின் சில பிரிவுத் தலைவர்கள், தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கிளைத் தலைவர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். பெர்சத்து கட்சியின் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசினின் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கை இழந்ததே இந்த ஒட்டுமொத்த ராஜினாமாவுக்குக் காரணம் என ஷாருல் குறிப்பிட்டுள்ளார்.








