Oct 18, 2025
Thisaigal NewsYouTube
சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி
அரசியல்

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.17-

17வது சபா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாரிசான் வேட்பாளர்களின் பட்டியல், வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

அன்றைய நாளே, பாரிசான் போட்டியிடும் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையும் அறிவிக்கப்படும் என்று அம்னோ தலைவருமான ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், மொத்தமுள்ள 73 தொகுதிகளிலும் பாரிசான் போட்டியிடாது என்று கூறிய ஸாஹிட், வெற்றி பெறும் வாய்ப்பு உள்ள தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

16-ஆவது சபா சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விகளைப் பாடமாகக் கொண்டு, இம்முறை போட்டியிடும் ஒவ்வொரு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பைத் தக்க வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News