Oct 26, 2025
Thisaigal NewsYouTube
மக்கள் சேவை மையத் திறப்பு விழாவில் டத்தோ ஸ்ரீ சைஃப்புடின் நசுதியோன் உறுதி
அரசியல்

மக்கள் சேவை மையத் திறப்பு விழாவில் டத்தோ ஸ்ரீ சைஃப்புடின் நசுதியோன் உறுதி

Share:

கெடா, நவ. 17-

கெடா மாநிலத்தை மீண்டும் ஒற்றுமை அரசாங்கம் கையாளும் என்பதை ஆணித்தரமாக நிலை நிறுத்துவத்தற்கு தன்னுடைய சேவை மையம் தொடங்கிவிட்டத்தாக தெரிவித்தார் உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃப்புடின் நசுதியோன் இஸ்மாயில் .

இரண்டு ஆண்டுகளில் எதிர்நோக்கவிருக்கும் 16வது பொதுத்தேர்தலில் கெடா மாநிலத்தில் ஒற்றுமை அரசாங்கம் இழந்த தொகுதிகளைக் கைப்பற்ற இப்பொழுதே அதற்கான நடவடிக்கைகள் ஆரமிக்கப்பட்டு விட்டத்தாக சைஃப்புடின் நசுதியோன் கூறினார்.

இம்முறை 16 வது பொதுத்தேர்தலில் மக்கள் கூட்டணி மற்றும் தேசிய முன்னணி ஆகிய இரண்டு கட்சிகள் ஒன்றாகக் களத்தில் இறங்கவுள்ளனர் . குறிப்பாக, கெடா மாநிலத்தைக் கைப்பற்ற வேண்டும் . கடந்த நான்கு ஆண்டுகளாக இம்மாநிலம் எதிர் கட்சியின் கைபிடியில் இருந்து வருகிறது. அதனால் இம்மாநிலத்தில் மக்கள் எதிர்நோக்கும் சில பிரச்சனைகள் தீர்க்க முடியாத சூழ்நிலையில் இருந்து வருவத்தாக டத்தோ ஸ்ரீ சைஃப்புடின் நசுதியோன் சுட்டிக்காட்டினார்.

நேற்று லுனாஸ் ALLIANCE வங்கியின் அருகாமையில் கூலிம் தெற்கு கெடா மக்களுக்காக சைஃப்புடினின் மக்கள் சேவை மையத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து உரையாற்றுகையில், இவ்வாறு குறிப்பிட்டார் . இந்த சேவை மையத்தில் மக்கள் எதிர்நோக்கி வரும் குடியுரிமை, அடையாள அட்டை பிரச்சனைகள் ஆகியவற்றோடு இதரப் பிரச்சனளையும் இங்கு தெரிவிக்கலாம் என்றார்.

சேவை மையத்தைத் திறப்பு விழாவுடன் தீபாவளி விருந்து உபசரிப்பும் நடைபெற்றது.

Related News

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!

மலேசியா-அமெரிக்க வரி மீதான உடன்பாடு: இறுதி கட்டப் பேச்சு வார்த்தையில் உள்ளது

மலேசியா-அமெரிக்க வரி மீதான உடன்பாடு: இறுதி கட்டப் பேச்சு வார்த்தையில் உள்ளது

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்