Feb 14, 2026
Thisaigal NewsYouTube
கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களின் கூட்டங்களுக்குச் செல்ல வேண்டாம் – அஸ்மின் அலி எச்சரிக்கை
அரசியல்

கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களின் கூட்டங்களுக்குச் செல்ல வேண்டாம் – அஸ்மின் அலி எச்சரிக்கை

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.14-

பெர்சத்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் நேற்று நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஏற்பாடு செய்யும் எந்தவொரு கூட்டத்திலும், மற்றக் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அஸ்மின் அலி எச்சரித்துள்ளார்.

நேற்று பெர்சத்து கட்சியின் துணைத் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அஸ்மின் அலி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இன்று மதியம் ஹம்ஸா ஸைனுடின் தலைமையில் கூட்டம் ஒன்று நடத்தவுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

ஹம்சாவுக்கும், பெர்சாத்து தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசினுக்கும் கடந்த சில மாதங்களாக தலைமைத்துவ மோதல் நிலவி வந்த நிலையில், நேற்று அதன் உச்சக் கட்டமாக ஹம்ஸா உட்பட 16 பேர் கட்சியியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News