பொந்தியான், பிப்ரவரி.15-
பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டத் தலைவர்கள் அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்தால், அவர்களை மீண்டும் அம்னோவில் இணைத்துக் கொள்வது குறித்து கட்சியின் உச்சமன்றம் பரிசீலிக்கும் என தன் உறுப்பினர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் மஸ்லான் தெரிவித்துள்ளார். கட்சியின் கொள்கைகளையும் அடிமட்டத் தொண்டர்களின் ஆதரவையும் அடிப்படையாகக் கொண்டே இத்தகைய முடிவுகள் எடுக்கப்படும் என்றும், பிற கட்சிகளின் பிளவுகளை அம்னோ ஒரு போதும் சாதகமாகப் பயன்படுத்தாது என்றும் அவர் குறிப்பிட்டார். Rumah Bangsa உள்ளிட்ட முக்கிய அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையில், தகுதியான தலைவர்களை மீண்டும் வரவேற்பதில் அம்னோ திறந்த மனதுடன் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.








