Aug 7, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் தேர்தல்: பெரிக்காத்தான் நேஷனல் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு
அரசியல்

நெகிரி செம்பிலான் தேர்தல்: பெரிக்காத்தான் நேஷனல் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு

Share:

சிரம்பான், ஜூலை.17-

வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், Perikatan Nasional கூட்டணியின் Bersatu கட்சியைத் தவிர மற்ற கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில் PAS 5 தொகுதிகளிலும், Wawasan கட்சி 4 தொகுதிகளிலும், Gerakan மற்றும் மலேசிய இந்திய மக்கள் கட்சி தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

Klawang, Serting, Lobak, Sikamat, Ampangan, Bukit Kepayang, Mambau, Paroi, Lukut, Bagan Pinang மற்றும் Gemas ஆகிய 11 தொகுதிகளில் பெரிக்காத்தான் கூட்டணியானது களமிறங்குகிறது.

இது குறித்து Ampangan பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பை வெளியிட்ட பெரிக்காத்தான் தலைவர் Datuk Seri Ahmad Samsuri Mokhtar, நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தில் இடம்பிடிக்கும் இலக்குடன் இந்தத் தேர்தலை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய மக்கள் கட்சி சார்பில், Lukut தொகுதியில், Sathes Kumar Nilameham களமிறக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், Wawasan கட்சித் தலைவர் Datuk Seri Hamzah Zainudin, புதிய அரசியல் ஒத்துழைப்பின் அடிப்படையில் 11 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், மலேசிய இந்திய மக்கள் கட்சித் தலைவர் P. Punithan, தூய்மையான அரசியலை கடைப்பிடிக்குமாறு வேட்பாளர்களுக்கு அறிவுறுத்திய நிலையில், Gerakan தலைவர் Datuk Dr Dominic Lau, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்திக்குமாறு கட்சித் தொண்டர்களை கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், போட்டியிடாத Datuk Seri Mukhriz Mahathir தலைமையிலான Pejuang கட்சி, பெரிக்காத்தான் வேட்பாளர்களுக்கு முழு ஆதரவு வழங்கும் என்றும், Bersatu தனது வேட்பாளர்களை இன்று அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா விலகல்: அன்வார்  வரவேற்பு

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா விலகல்: அன்வார் வரவேற்பு

பெரிக்காத்தான் நேஷனல்' கூட்டணியில் இருந்து பெர்சத்து நீக்கம்? ஹாடி அவாங்கிற்கு அஸ்மின் அலி மறுப்பு

பெரிக்காத்தான் நேஷனல்' கூட்டணியில் இருந்து பெர்சத்து நீக்கம்? ஹாடி அவாங்கிற்கு அஸ்மின் அலி மறுப்பு

பெர்சத்து கட்சி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலிருந்து தானாகவே வெளியேறியது: ஹாடி அவாங் அதிரடி அறிவிப்பு

பெர்சத்து கட்சி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலிருந்து தானாகவே வெளியேறியது: ஹாடி அவாங் அதிரடி அறிவிப்பு

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 10 புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 10 புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு

திரங்கானு மாநில பெர்சாத்து தலைவர் பதவியில் இருந்து ரஸாலி இட்ரிஸ் ராஜினாமா

திரங்கானு மாநில பெர்சாத்து தலைவர் பதவியில் இருந்து ரஸாலி இட்ரிஸ் ராஜினாமா

பல்கலைக்கழகங்களில் இணையும் மாணவர்களுக்கான 1,000 ரிங்கிட் கல்விப் பரிசு: பயன் அடையும் மாணவர்களின் எண்ணிக்கையை 5,000 ஆக உயர்த்த சிலாங்கூர் அரசு திட்டம்

பல்கலைக்கழகங்களில் இணையும் மாணவர்களுக்கான 1,000 ரிங்கிட் கல்விப் பரிசு: பயன் அடையும் மாணவர்களின் எண்ணிக்கையை 5,000 ஆக உயர்த்த சிலாங்கூர் அரசு திட்டம்