புத்ராஜெயா , ஆகஸ்ட் 30-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, பக்காத்தான் ஹாராப்பான் அரசாங்கத்தினால் ரத்து செய்யப்பட்ட / பொருள், சேவை வரியான GST, மீண்டும் அறிமுகப்படுத்த சாத்தியம் இருப்பதாக கூறப்படுவதை அரசாங்கம் மறுத்துள்ளது.
அந்த பொருள, சேவை வரியை அமல்படுத்துவதற்கு அமைச்சரவை விவாதித்து வருவதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் செய்தியில் உண்மையில்லை என்று அரசாங்கப் பேச்சாளர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
அமைச்சரவையில் அப்படியொரு விவாதம் நடைபெறவில்லை என்பதையும் தொடர்புத்துறை அமைச்சராக ஃபஹ்மி ஃபாட்சில் விளக்கினார்.
முன்னதாக, மலேசியா தனது பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு பெட்ரோலுக்கான அரசு மானிய உதவித் தொகையை குறைப்பதற்குப் பதிலாக GST- வரியை மீண்டும் அமல்படுத்துவதற்கு திட்டம் கொண்டுள்ளதாக ஊடக நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது.








