கெர்லிங் , மே 11-
கோலகுபு பாரு இடைத் தேர்தலையொட்டி பல வாக்களிப்பு மையங்கள் சுறுசுறுப்பாக காணப்பட்ட போதிலும் கெர்லிங் - தோட்ட தமிழ்ப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு மையம் வெறிச்சோடி காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 18 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு வாக்களிப்பு மையங்கள் திறக்கப்பட்டன. அனைத்து வாக்களிப்பு மையங்களிலும் மக்கள் திரளாக வரிசையில் நின்றிருந்த வேளையில் இந்தியர்களை பெருவாரியான வாக்காளர்களாக கொண்ட கெர்லிங்கில் உள்ள தோட்டத் தமிழ்ப்பள்ளியில் வாக்காளக்ளை அதிகளவில் காண முடியவில்லை.
காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரையில் மேற்கெள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. தமிழ்ப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு மையத்தில் வாக்காளர்கள் திரளாதது குறித்து கேட்ட போது, அதற்கு பதில் அளித்த 39 வயது பிரியா முருகன் என்பவர், பிற்பகலில் மக்கள் வாக்களிக்க வரலாம் என்றார்.








