கோத்தா கினபாலு, நவம்பர்.09-
சபா மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 73 தொகுதிகளில் 41 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேசிய முன்னணி அறிவித்துள்ளது, இது நம்பிக்கைக் கூட்டணி உட்பட பல கட்சிகளுடனான போட்டிக்கு மத்தியில் நிகழ்ந்துள்ளது. சபாவின் தேசிய முன்னணி தலைவர் புங் மொக்தார் ராடின், தமது தொகுதியான Lamag–இலேயே மீண்டும் போட்டியிடுகிறார்.
சூக் தொகுதியில் Arthur Joseph Kurup, Tempasuk தொகுதியில் Abdul Rahman Dahlan, Usukan தொகுதியில் Salleh Said Keruak போன்ற முக்கிய நபர்களைக் களமிறக்கி, இம்முறை ஆட்சியைக் கைப்பற்ற தேசிய முன்னணி பெரும் நம்பிக்கையுடன் உள்ளது. 2020 தேர்தலில் 14 இடங்களைப் கைப்பற்றிய தேசிய முன்னணி, இந்தத் தேர்தலைச் சபா மாநில அரசாங்கத்தை மீட்கும் ‘கடைசிப் போர்’ என்று வர்ணித்துள்ளது. நவம்பர் 29ஆம் தேதி நடைபெறும் இந்தத் தேர்தலில், மொத்தமுள்ள 1.78 மில்லியன் வாக்காளர்கள் சபா அரசின் தலைவிதியை முடிவு செய்ய உள்ளனர்.








