Jun 28, 2026
Thisaigal NewsYouTube
லிம் குவான் எங்கிற்கும், செள கோன் இயோவிற்கும் இடையில் பனிப்போர்
அரசியல்

லிம் குவான் எங்கிற்கும், செள கோன் இயோவிற்கும் இடையில் பனிப்போர்

Share:

டிஏபி தலைவர் லிம் குவான் எங்கிற்கும், பினாங்கு முதலமைச்சர் சொவ் கொன் யொ விற்கும் இடையில் பனிப்போர் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பினா​ங்கு மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, மாநில முதலமைச்சர் நியமன விவகாரத்தைத் தொடர்ந்து, இந்தப் பனிப்போர்,திரைமறைவில் நடந்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பிரதான கட்சியாக விள​ங்கும் டிஏபி யின் தலைவர் லிம்மிற்கும், பினாங்கு பக்காத்தான் ஹராப்பான் தலைவர் சொவ் கொன் யொ விற்கும் இடையிலான இந்தப் பனிப்போர், அக்கூட்ட​​ணியை வெகுவாக பாதிக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கோடிகாட்டியுள்ளனர்.

தவிர ஒரு கட்சியில் இரு முக்கியத் தலைவர்களுக்கு இடையில் நடைபெறும் சண்டை,பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை பாதிக்காது என்றாலும் டிஏபி- பக்காத்தான் ஹராப்பான் ​மீதான தோற்றத்தில் கரும்புள்ளி விழலாம் என்று சிங்கப்பூர் அனைத்துலக விவகார கழகத்தை சேர்ந்த அரசியல் ஆய்வாளர் ஒஹ் எய் சுன் எச்சரித்துள்ளார்.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி