கோலாலம்பூர், அக்டோபர்.24-
கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகையை எதிர்த்து சுமார் 700 பேர் இன்று ஆட்சேப மறியலில் ஈடுபட்டனர்.
கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் வெளியே அவர்கள் தங்கள் ஆட்சேபத்தைப் பதிவு செய்தனர். விரும்பத்தகாத சம்பவம் ஏதும் நிகழ்ந்து விடாமல் இருப்பதற்கு கலகத் தசுப்புப் போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர்.
டொனால்ட் டிரம்பை நிராகரியுங்கள் என்ற வாசகத்தை தாங்கிய அட்டைகள் மற்றும் பதாகைகளை ஏந்திக் கொண்டு அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
அதே வேளையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாலஸ்தீனக் கொடிகளை ஏந்திக் கொண்டு, Hezbollah… வாழ்க, Hamas வாழ்க என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
அமைதி மறியலில் கலந்து கொண்டவர்களில் முன்னாள் பிகேஆர் எம்.பி. தியான் சுவாவும் ஒருவர் ஆவார்.








