பாஸ் கட்சி ஆட்சி செய்யும் 3 மாநிலங்களில் தமது ஹரிராயா பொது உபசரிப்பை நடத்தவிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை கிளந்தான் மாநில அரசாங்கம் வரவேற்பதாக இன்று அறிவித்துள்ளது.
திரெங்கானுவிற்கு அடுத்து பிரதமரை வரவேற்கும் இரண்டாவது மாநிலமாக கிளந்தான் விளங்குகிறது. கோத்தா பாருவில் பிரதமரின் நோன்புப்பெருநாள் பொது உபசரிப்பு நடத்தப்படுவது குறித்து மத்திய அரசாங்கம் தமக்கு கடிதம் எழுத்தியுள்ளதாக மந்திரி புசார் Ahmad Yakop தெரிவித்தார்.
பிரதமரின் பொது பொது உபரிப்பு கிளந்தானில் நடத்துவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று மாநில அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளதாக Ahmad Yakop குறிப்பிட்டார்.
பிரதமரின் இந்த பொது உபசரிப்பில் மூன்றாவது மாநிலமான கெடா, இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.