கோத்தா கினபாலு, டிசம்பர்.09-
சபா மாநில அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடின், கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த லாமாக் சட்டமன்றத் தொகுதி காலியாகி விட்டதாக சபா சட்டமன்றம், இன்று தேர்தல் ஆணையமான எஸ்பிஆர்- ரிடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தது.
சபா சட்டமன்றத்தின் 17 ஆவது பொதுத் தேர்தல் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்த எட்டாவது நாளில் காலமான புங் மொக்தார் மறைவைத் தொடர்ந்து இடைத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் லாமாக் தொகுதி காலியாகி விட்டதாக சபா சட்டமன்ற சபாநாயகர் டத்தோ காட்ஸிம் எம்.யாஹ்யா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சபா சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அந்த மாநிலத்தில் நடைபெறவிருக்கும் முதலாவது இடைத் தேர்தலாக இது கருதப்படுகிறது.








