Sep 26, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரத்தில் தலையிடவில்லை - உண்டாங்களுக்கு அன்வார் பதிலடி
அரசியல்

நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரத்தில் தலையிடவில்லை - உண்டாங்களுக்கு அன்வார் பதிலடி

Share:

நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரத்தில் தாம் தலையிட முயற்சிக்கவில்லை என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு முடியாட்சியைப் பாதுகாப்பதற்காகவே தாம் குரல் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெகிரி செம்பிலானில் உண்டாங்-கள், யாங் டிபெர்துவான் பெசாரை எளிதில் பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்றும், அவ்வாறு நடந்தால் அரசியலமைப்பு முடியாட்சி முறைக்கு மிகப் பெரிய நெருக்கடி ஏற்படக்கூடும் என்றும் அன்வார் விளக்கமளித்துள்ளார்.

மேலும், யாங் டிபெர்துவான் பெசார் பதவியில் மாற்றம் செய்யப்படுவதற்கு குறிப்பிட்ட காரணங்கள் இருக்க வேண்டும் என நெகிரி செம்பிலான் மாநில சட்டங்கள் குறிப்பிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஆட்சியாளர் மனநலம் பாதிக்கப்பட்டால், பார்வை அல்லது பேச்சுத் திறனை இழந்தால், இஸ்லாமிய சட்டத்தின் கீழ் தகுதியிழந்தால், பதவியின் கண்ணியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டால் அல்லது மாநில அரசியலமைப்பை வேண்டுமென்றே புறக்கணித்தால் மட்டுமே மாற்றம் செய்ய முடியும் என்பதையும் அன்வார் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், ஒரு ஆட்சியாளரைப் பதவி நீக்கம் செய்வதை எளிதாக்க முடியாது என்பதால் தான் சட்டத்துறை தலைவர் உறுதியான முடிவை எடுத்ததாக குறிப்பிட்டுள்ள அன்வார், இதனை அனுமதித்தால், நாளை பிரதமரும் அமைச்சரவையும் யாங் டிபெர்துவான் அகோங்கை மாற்ற வேண்டும் என நினைத்து, மலாய் ஆட்சியாளர்களுக்கு கடிதம் எழுதும் நிலை ஏற்படலாம் என்றும் எச்சரித்துள்ளார்.

அதேவேளையில் யாங் டிபெர்துவான் அகோங்கை மாற்றுவது பிரதமரின் அதிகாரத்திற்கு உட்பட்டது அல்ல என்றும், பிரதமர் நாட்டை நிர்வகிக்கும் தலைவராக இருந்தாலும் அவரது அதிகாரங்களுக்கு வரம்புகள் உள்ளன என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நெகிரி செம்பிலானின் அரச விவகாரங்களில் தலையிட வேண்டாம் என அன்வாருக்கும், சட்டத்துறைத் தலைவருக்கும் மாநிலத்தின் நான்கு உண்டாங்களும் தம்பின் துங்கு பெசாரும் நேரடி எச்சரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சபா, சரவாக் மாநிலங்களுக்கு கூடுதல் நாடாளுமன்றத் தொகுதிகள் எத்தனை? - புத்ரா ஜெயாவிடம் விளக்கம் கேட்கிறார் சாலே

சபா, சரவாக் மாநிலங்களுக்கு கூடுதல் நாடாளுமன்றத் தொகுதிகள் எத்தனை? - புத்ரா ஜெயாவிடம் விளக்கம் கேட்கிறார் சாலே

நெகிரி செம்பிலான் நெருக்கடி குறித்து சட்டத்துறைத் தலைவர் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு – சட்ட நிபுணர்

நெகிரி செம்பிலான் நெருக்கடி குறித்து சட்டத்துறைத் தலைவர் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு – சட்ட நிபுணர்

நெகிரி செம்பிலான் அரசாங்கம் துவாங்கு முஹ்ரிஸ் பதவி குறித்த சர்ச்சையை நிறுத்த வேண்டும் – பக்காத்தான் ஹராப்பான்

நெகிரி செம்பிலான் அரசாங்கம் துவாங்கு முஹ்ரிஸ் பதவி குறித்த சர்ச்சையை நிறுத்த வேண்டும் – பக்காத்தான் ஹராப்பான்

பெரிக்காத்தான் நேஷனல் விவகாரத்தில் ஆர்ஓஎஸ்ஸை குற்றம்சாட்ட வேண்டாம் – அஸ்மின் அலி

பெரிக்காத்தான் நேஷனல் விவகாரத்தில் ஆர்ஓஎஸ்ஸை குற்றம்சாட்ட வேண்டாம் – அஸ்மின் அலி

நெகிரி நெருக்கடிக்கு முந்தைய அரசைக் குறை கூற வேண்டாம் – இஸ்மாயிலுக்கு அமினுடின் சவால்

நெகிரி நெருக்கடிக்கு முந்தைய அரசைக் குறை கூற வேண்டாம் – இஸ்மாயிலுக்கு அமினுடின் சவால்

மலாக்கா தேர்தல்: அக்டோபர் 7-ல் கூடுகிறது தேர்தல் ஆணையம்

மலாக்கா தேர்தல்: அக்டோபர் 7-ல் கூடுகிறது தேர்தல் ஆணையம்