Dec 20, 2025
Thisaigal NewsYouTube
சட்டத்துறை இலாகாவின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது : மூடா
அரசியல்

சட்டத்துறை இலாகாவின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது : மூடா

Share:

கோலாலம்பூர், டிச. 13-


வெளிநாட்டு விசா முறை ஒப்பந்தம் தொடர்பான 40 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அப்பீல் நீதிமன்றத்தில் பிராசிகியூஷன் தரப்பு செய்து கொண்ட மேல்முறையீட்டை மீட்டுக்கொண்டது மூலம் சட்டத்துறை இலாகாவின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது என்று மூடா கட்சி வர்ணித்துள்ளது.

அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட்டிற்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்கு நிர்வகிக்கப்பட்ட முறையை அடிப்படையாக கொண்டு பார்க்கையில் அதிகார வர்க்கத்தின் அரசியல் கருவியாக சட்டத்துறை இலாகா பயன்படுத்தப்படுகிறது என்று பொது மக்கள் கூறி வரும் குற்றச்சாட்டை வலுப்படுத்தியுள்ளது என்று மூடா கட்சி, இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சட்டத்துறை இலாகாவின் நம்பக்கத்தன்மை குறைந்து விட்டதைப் போல் இவ்வழக்கு சித்தரிக்கிறது என்று மூடா வர்ணித்துள்ளது.

அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஒரு தரப்பினரையும்,/ அரசாங்கத்துடன் இணையாத தரப்பினரையும், வெவ்வேறு கோணத்தில் , வெவ்வேறு நிலைகளில் பார்க்கப்படுகிறது, வெவ்வேறு திசைகளில் அவர்களின் வழக்குகள் கையாளப்படுகின்றன என்று பொது மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

அகமட் ஜாஹிட் வழக்கு கையாளப்பட்ட முறை, அந்தக் குற்றச்சாட்டை வலுப்படுத்துவது போல் உள்ளது என்று மூடா கூறுகிறது.

அம்னோ தலைவருக்கு எதிரான 40 குற்றச்சாட்டுகள் தொடர்பான மேல்முறையீட்டை மீட்டுக்கொள்வதற்கு அவர் செய்து கொண்ட பிரதிநிதித்துவ மனுவை ஏற்றுக்கொள்ள முடியும் என்றால், அப்படியொரு வழக்கை சட்டத்துறை இலாகா, எதற்காக நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தது என்பதை அறிய மக்கள் ஆர்வமாக உள்ளனர் என்று மூடா கட்சி தெரிவித்துள்ளது.

சட்டத்துறை இலாகாவிற்கு அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறதா என்பதையும் மூடா கட்சி வினவியுள்ளது.

Related News