Oct 25, 2025
Thisaigal NewsYouTube
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதில்லை
அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதில்லை

Share:

கோலாலம்பூர், டிச.4-


மலேசிய மக்களவையில் தற்போது 222 பேராக இருந்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது கருத்து தெரிவித்துள்ளார்.

சில தரப்பினர் முன்வைத்துள்ள பரிந்துரையைப் போல நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதில்லை. தற்போது உள்ள 222 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை போதுமானதாகும் என்று துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1982 முதல் 2004 ஆம் ஆண்டு வரை மக்களவை சபாநாயகராக பொறுப்பில் இருந்த காலஞ்சென்ற முகமட் ஸாஹிர் இஸ்மாயில் இப்படியொரு பரிந்துரையை ஏற்கனவே முன்வைத்தார். ஆனால், தற்போதுள்ள 222 நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையே போதுமானதாகும் என்று கூறி பலர் அந்த பரிந்துரையை நிராகரித்து விட்டனர் என்று துன் மகாதீர் நினைவுகூர்ந்தார்.

Related News