சிகாமட் நாடாளுமன்றத் தேர்தல் முடிவை எதிர்த்து , அத்தொகுதியில் போட்டியிட்ட பாரிசான் நேஷனல் வேட்பாளர் டான் ஶ்ரீ எம். ராமசாமி செய்து கொண்ட மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட புத்ராஜெயா , கூட்டரசு நீதிமன்றம் இவ்வழக்கு தொடர்பாக முழு விசாரணை நடத்தும் படி தேர்தல் நீதி மன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி டத்தோ ஜபரியா முகமட் யூசோப் ஆணைப் பிறப்பித்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் ஜொகூர் , சிகாமட் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற பிகேஆர் கட்சி வேட்பாளர் ஆர்.யுனேஸ்வரனின் வெற்றி செல்லுபடியாகாது என்று அறிவிக்கக் கோரி , அத்தொகுதியில் போட்டியிட்டவரும் , ம.இ.கா பொருளாளருமான டான் ஶ்ரீ எம். ராமசாமி இவ்வழக்கைத் தொடுத்துள்ளார்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


