Dec 22, 2025
Thisaigal NewsYouTube
பெரிக்காத்தான் நேஷனலின் ஆலோசகராக நியமிக்க பாஸ் விருப்பம்
அரசியல்

பெரிக்காத்தான் நேஷனலின் ஆலோசகராக நியமிக்க பாஸ் விருப்பம்

Share:

அரசியலில் தாங்கள் எதிர்நோக்கியுள்ள பெரும் சவாலை சமாளிக்கவும், அடுத்தக் கட்ட அரசியல் நகர்வை முன்னெடுக்கவும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் அலோசகராக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகா​தீர் முகமதுவை நியமிப்பதற்கு பாஸ் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இம்மாதம் தொடக்கத்தில் துன் மகா​தீருடன் பாஸ் கட்சியின் சில முன்னணி தலைவர்கள் நடத்திய சந்திப்பில் பெரிக்காத்தான் நேஷனலின் தலைவர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசினுக்கு பாஸ் கட்சி அழைப்பு விடுக்கப்படவில்லை என்று முன்னாள் அமைச்சர் சாலெஹ் சயிட் கெருவாக் தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலிலும், நடந்து முடிந்த 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலிலும் தாம் பெரும் சாதனையை நிகழ்த்தியிருப்பதாக நம்பும் பாஸ் கட்சி, பெரிக்காத்தான் நேஷனலின் பெரும் தலைவராக துன் மகாதீரை நியமிப்பது மூலம் அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கான இலக்கை அடைய முடியும் என்று அந்த மதவாத கட்சி நம்புகிறது. 

இது உண்மையிலேயே ஓர் ஆரோக்கியமான நடவடிக்கையாகும் என்று சபா முன்னாள் முதலமைச்சருமான சாலெஹ் சயிட் கெருவாக் வர்ணித்துள்ளார்.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்