Oct 28, 2025
Thisaigal NewsYouTube
மலாய்க்காரர்களின் ஆதரவை பெறுவதில், அமானா கட்சிக்கு DAP கட்சி இடையூறாக உள்ளது
அரசியல்

மலாய்க்காரர்களின் ஆதரவை பெறுவதில், அமானா கட்சிக்கு DAP கட்சி இடையூறாக உள்ளது

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 19-

புறநகர் பகுதிகளில் மலாய்க்காரர்களின் ஆதரவை, அமானா கட்சியால் பெற முடியாமல் இருப்பதற்கு, DAP கட்சியும் ஒரு காரணம் என்பதை மறுக்க இயலாது என அதன் தொடர்பு பிரிவு இயக்குநர் காலித் அப்துல் சமத் கூறினார்.

DAP கட்சி, அமானா கட்சிக்கு மூத்த அண்ணன் போல் உள்ளதாகவும் அக்கட்சியை தாங்கள் அதிகம் தாங்குவதாகவும் எதிர்க்கட்சிகள் கூறிவரும் கூற்றுகளால், மலாய்க்காரர்களின் ஆதரவை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மேலும், அம்னோ, PAS முதலானவை பழைய கட்சிகள் என்பதால், அவற்றின் செல்வாக்கை குறைக்க முடியாததை ஒப்புக்கொண்ட காலித், அம்னோ கட்சி எதிர்க்கட்சியினரின் தொகுதிகள் உள்பட களத்தில் இறங்கி, மலாய்க்காரர்களுக்கு உண்மைநிலைக் குறித்து விளக்கம் அளித்து வருவதாக என்றார்.

Related News