Jul 15, 2026
Thisaigal NewsYouTube
மாச்சாப் சட்டமன்றத் தொகுதி:டத்தோ ஆன் ஹாஃபிஸ் காசி-ஐ எதிர்த்து நூர் ஹாஃபிஸ் ரோஸ்லான் நேரடிப் போட்டி – வாக்காளர்கள் திரளாக வந்து வாக்களிக்க அழைப்பு!
அரசியல்

மாச்சாப் சட்டமன்றத் தொகுதி:டத்தோ ஆன் ஹாஃபிஸ் காசி-ஐ எதிர்த்து நூர் ஹாஃபிஸ் ரோஸ்லான் நேரடிப் போட்டி – வாக்காளர்கள் திரளாக வந்து வாக்களிக்க அழைப்பு!

Share:

வரவிருக்கும் ஜோகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில், மாச்சாப் சட்டமன்றத் தொகுதியில் அமானா கட்சியின் சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக நூர் ஹாஃபிஸ் ரோஸ்லான் களம் காண்கிறார்.

இத்தொகுதியில் ஜோகூர் இடைக்கால மந்திரி பெசார் டத்தோ ஆன் ஹாஃபிஸ் காசியுடன் அவர் நேரடிப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார். இருவருக்கு இடையே மட்டுமே பலத்த போட்டி நிலவும் வேளையில், வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள வாக்குப்பதிவு தினத்தில், மாச்சாப் தொகுதி வாக்காளர்கள் அனைவரும் தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றத் தவறாமல், திரளாக வெளிவந்து வாக்களிக்க வேண்டும் என்று நூர் ஹாஃபிஸ் ரோஸ்லான் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் இந்தத் தேர்தல் வாய்ப்பைப் பயன்படுத்தி, தொகுதி மக்கள் தங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். குறிப்பாக, வேலை மற்றும் இதர காரணங்களுக்காக வெளிமாநிலங்களில் வசித்து வரும் மாச்சாப் தொகுதி வாக்காளர்கள், தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பி, பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரான தமக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மாச்சாப் தொகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், அங்குள்ள மக்களின் குரல் சட்டமன்றத்தில் வலுவாக ஒலிக்கவும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரான தம்மை ஆதரிப்பது மிக அவசியமாகும் என்று நூர் ஹாஃபிஸ் ரோஸ்லான் வலியுறுத்தியுள்ளார்.

இத்தேர்தலில் தற்போதைய மத்திய அரசாங்கத்தின் கொள்கைகளுடன் இணங்கிச் செயல்படக்கூடிய, எளிய மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய துடிப்புமிக்க ஒரு வேட்பாளராக நூர் ஹாஃபிஸ் ரோஸ்லான் பார்க்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

நெகிரி செம்பிலான் தேர்தல்: பாஸ் - அம்னோ கூட்டணி நிலவரம் புதன், வியாழனில் தெரியவரும்

நெகிரி செம்பிலான் தேர்தல்: பாஸ் - அம்னோ கூட்டணி நிலவரம் புதன், வியாழனில் தெரியவரும்

மலாக்கா அரசில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்க: ஜசெக-விற்கு பிரதமர் அன்வார் கோரிக்கை

மலாக்கா அரசில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்க: ஜசெக-விற்கு பிரதமர் அன்வார் கோரிக்கை

மலாக்கா அரசில் அதிகாரப் பகிர்வு இல்லை; புத்ராஜெயா மாதிரி மட்டுமே: முதலமைச்சர்  ரவுஃப் விளக்கம்

மலாக்கா அரசில் அதிகாரப் பகிர்வு இல்லை; புத்ராஜெயா மாதிரி மட்டுமே: முதலமைச்சர் ரவுஃப் விளக்கம்

அதிரடி திருப்பம்: மலாக்கா மாநில ஆட்சியிலிருந்து  வெளியேறுகிறது ஜசெக.

அதிரடி திருப்பம்: மலாக்கா மாநில ஆட்சியிலிருந்து வெளியேறுகிறது ஜசெக.

தாய்லாந்து அமைதிப் பேச்சுவார்த்தை: மலேசியாவின் ஒத்துழைப்பை உறுதி செய்த அமைச்சர்

தாய்லாந்து அமைதிப் பேச்சுவார்த்தை: மலேசியாவின் ஒத்துழைப்பை உறுதி செய்த அமைச்சர்

பெர்சத்து தகவல் பிரிவுத் தலைவர் மீது 10 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கு: வான் சைஃபுல் அதிரடி

பெர்சத்து தகவல் பிரிவுத் தலைவர் மீது 10 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கு: வான் சைஃபுல் அதிரடி