ஈப்போ, அக்டோபர்.05-
அடுத்த மாநிலத் தேர்தலில் சபா சட்டமன்றத்தில் தாங்கள் தற்போது வைத்திருக்கும் ஆறு தொகுதிகளையும் தற்காத்துக் கொள்வதுடன், கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளில் போட்டியிட டிஏபி திட்டமிட்டுள்ளது. வெற்றி வாய்ப்புள்ள இரண்டு தொகுதிகளை டிஏபி அடையாளம் கண்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் உறுதிப்படுத்தினார்.
கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற இரு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவிய போதும், அது குறித்து டிஏபி கவலைப்படவில்லை என்றும், சபா இளைஞர் தலைவர்கள் மீது முழு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார். கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ், இரண்டகம் செய்யும் நிகராளிகள் தங்கள் தகுதியை இழப்பார்கள் என்று அவர் தெளிவாக எச்சரித்தார்.