தென் கொரியா, அக்டோபர்.30-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்றிரவு தென் கொரியா, Gyeongju- நகரைச் சென்றடைந்தார்.
நாளை அக்டோபர் 31 ஆம் தேதி தொடங்கவிருக்கும் APEC ( ஏபெக் ) எனப்படும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்புக்கான தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளவிருக்கிறார்.
பிரதமரை ஏற்றிச் சென்ற சிறப்பு விமானம், தென்கொரியா நேரப்படி இரவு 7.41 மணியளவில் Busan, Gimhae அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது.
ஹோட்டலைச் சென்றடைந்த பிரதமரை முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸாஃப்ருல் அஸிஸ் Aziz மற்றும் மலேசியப் பேராளர்கள் குழுவினர் வரவேற்றனர். APEC மாநாடு நாளை தொடங்கி நவம்பர் முதல் தேதி வரை இரண்டு தினங்களுக்கு நடைபெறுகிறது.








