கோலாலம்பூர், நவ. 15-
பிகேஆர் கட்சியில் ஒரு வாக்காளருக்கு ஒரு வாக்கு என்ற தேர்தல் வாக்களிப்பு நடைமுறையை பேராளர் முறைக்கு மாற்றுவதற்கான உத்தேசத் திட்டம் குறித்து இன்னும் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று அதன் தகவல் பிரிவுத் தலைவர் பாஹ்மி பாட்ஸில் தெரிவித்தார்.
இந்த உத்தேசத் திட்டம் இன்னமும் கட்சி அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறதே தவிர எந்தவொரு முடிவு எடுக்கப்படவில்லை என்று அவர் விளக்கினார்.
பிகேஆர் தேர்தலில் அடிமட்ட உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கும் ஒரு உறுப்பினருக்கு ஒரு வாக்கு என்ற நடப்பு முறை அகற்றப்பட்டால் அது குறித்து முழு வீச்சில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று தொகுதி தலைவர் ஒருவர் கூறியிருப்பது தொடர்பில் தொடர்புத்துறை அமைச்சரான பாஹ்மி பாட்ஸில் இதனை குறிப்பிட்டார்.








