Oct 16, 2026
Thisaigal NewsYouTube

ஊராட்சி மன்ற வரியை தடாலடியாக உயர்த்தாதீர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஊராட்சி மன்ற வரியை தடாலடியாக உயர்த்தாதீர்

நவ. 24-

மறு மதிப்பீடு செய்யப்பட்ட சொத்து வரி அதிகரிப்பு என்பது அவசரமாக இருக்கக்கூடாது, அது
மக்களின் நலனை கருத்தில் கொண்டு சுமையை அதிகரிக்காத வண்ணம் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார் வீட்டுவசதி, உள்ளாட்சி மன்ற அமைச்சர், Nga Kor Ming.

சொத்து வரி உயர்வு படிப்படியாகவும் தற்போதைய பணவீக்கத்தை கருத்தில் கொண்டும் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, சொத்து வரி இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை 2 முதல் 5 விழுக்காடு வரை மட்டுமே உயர்த்தப்படலாம் என்றார்.

இந்த அணுகுமுறை பினாங்கில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது, இங்கு சிறிய, நிலையான உயர்வு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஈப்போவிலும் இதே போன்ற அணுகுமுறையை ஆய்வு செய்து பின்பற்றலாம் என்று தாம் நம்புவதாகவும் இதனால் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் எனவும் ஙா கோர் மிங் கூறினார்.

கடந்த நவம்பர் 22 ஆம் தேதியன்று, ஈப்போ நகரின் பல குடிமக்கள் ஈப்போ மாநகராட்சி மன்றம் நடப்புக்குக்கொண்டு வர உள்ள 9 விழுக்காடு புதிய சொத்து வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதற்கிடையில், ஙா கோர் மிங் கூறுகையில், சொத்து வரி பிரச்சனை அண்மையில் நடைபெற்ற உள்ளூர் அரசாங்க தேசிய மாநாட்டில் எழுப்பப்பட்டதாகக் குறிப்பிட்டார். அரசின் கொள்கை தெளிவாக உள்ளது, இது மக்களுக்கான அரசு. அனைத்து எதிர்ப்புகளும் கருத்துகளும் நியாயமான முடிவு எடுக்கப்படுவதை உறுதி செய்ய ஆய்வு செய்யப்படும் என்று அவர் மேலும்ம் சொன்னார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →