ஜொகூர் , அக்டோபர் 07-
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜோகூர் மாநிலத்தில் வார இறுதி நாட்களைச் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றும் மாநில அரசின் முடிவு, அன்னிய நேரடி முதலீடுகளை அதிகரிக்கும் என்று ஜோகூர் டிஏபி-யின் புதிய தலைவர் தியோ நீ சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வார விடுமுறையை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றுவதற்கு ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிமின் அறிவிப்பை தியோ நீ சிங் வரவேற்றுள்ளார்.
இந்த முடிவு மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் ஒப்புதலைப் பெற்று இருப்பதாக அவர் கூறினார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் மாநிலத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த மாற்றம் அதிக வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் என்பது தமது நம்பிக்கையாகும் என்று Teo குறிப்பிட்டார்..
ஜோகூர் கடந்த ஆண்டு 753 பில்லியன் வெள்ளியை அல்லது நாட்டின் மொத்த வர்த்தகத்தில் 29 சதவீத வர்த்தக மதிப்பைப் பதிவு செய்துள்ளதாக அவர் விளக்கினார்..








