6 மாநிலங்களில் விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலின் போது, லஞ்ச ஊழலை வேரறுக்கும் விவகாரத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறு ஜசெக மூத்தத் தலைவர் lim kit siang கேட்டுக்கொண்டார்.
பினாங்கு, selangor, negeri sembilan, kedah, kelantan மற்றும் terenganu ஆகிய 6 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவிருக்கும் வேளையில், ஊழலை வேரறுக்கும் விவகாரத்தை, தேர்தல் பிரச்சாரத்தின் ஆயுதமாக கொள்ளுமாறு அரசியல் கட்சிகளை lim kit siang கேட்டுக்கொண்டார்.
2022 ஆம் ஆண்டின் அனைத்துலக அளவிலான லஞ்ச ஊழல் குறியீட்டில் விடுப்பட்டிருக்கும் முதல் 30 நாடுகளில், 5 நாடுகள் மட்டுமே ஆசியாவை சேர்ந்தவையாகும்.
சிங்கப்பூர், hong kong, japan, bhutan மற்றும் taiwan ஆகியவையே அந்த 5 நாடுகளாகும் என்று lim kit siang சுட்டிக்காடினார்.
கடந்த 1950 ஆம் ஆண்டுகளில், ஊழலில் உழன்ற நாடாக விளங்கிய hong kong மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள், உலகில் லஞ்சம் குறைந்த முதல் 30நாடுகளில் ஒன்றாக இடம்பெற்றிருக்கும் போது, மலேசியாவினால் ஏன் அவ்வாறு வர முடியவில்லை? என்று lim kit siang கேள்வி எழுப்பினார்.