டத்தோஸ்ரீ சரவணன் ஏமாற்றம்
மஇகா தேசிய துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன், நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குக் கல்வி அமைச்சு பதில் அளிக்காதது குறித்து தமது ஏமாற்றத்தைப் பதிவு செய்துள்ளார்.
தாம் கேட்ட கேள்வி ஒன்று அளிக்கப்பட்ட பதில் வேறு என்று தமது ஏமாற்றத்தை சரவணன் முகநூலில் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ஒதுக்கீடு மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு உதவும் திட்டங்கள் குறித்து தாம் முன்வைத்த கேள்விகளுக்கு எந்த பதிலையும் கல்வி அமைச்சு வழங்கவில்லை என்று சரவணன் குறிப்பிட்டார்.
மாறாக, 2023 ஆம் ஆண்டுக்கான அரசாங்க முழு உதவிப்பெற்ற பள்ளிகளுக்கும், பகுதி உதவிப்பெற்ற பள்ளிகளுக்கும் ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான தகவல் மட்டுமே வழங்கப்பட்டதாக சரவணன் தமது அதிருப்தியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.