கோலாலம்பூர், அக்டோபர்.13-
சபா மாநிலத்தின் 17 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி, வரும் வியாழக்கிழமை முடிவு செய்யப்படவிருக்கிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையமான எஸ்பிஆர், வரும் வியாழக்கிழமை தனது சிறப்புக் கூட்டத்தை கோத்தா கினபாலுவில் நடத்தவிருக்கிறது என்று இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அன்றைய தினம் காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த சிறப்புக் கூட்டத்திற்குப் பின்னர் நடைபெறும் செய்தியாளர்கள் கூட்டத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என்று அந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது.