Mar 4, 2026
Thisaigal NewsYouTube
மஇகா  ம​சீச.விற்கு  தொகுதிகள் வழங்கத் தயார்
அரசியல்

மஇகா ம​சீச.விற்கு தொகுதிகள் வழங்கத் தயார்

Share:
  • பெரிக்காத்தான் நேஷனல் அறிவிப்பு

ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்து இருக்கும் மஇகாவும் , ம​சீச.வும் பாரிசான் நேஷனல் கூட்டணியிலிருந்து விலகி, டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலில் இணையுமானால் அவ்விரு மூத்த கட்சிகளுக்கும் போட்டியிடுவதற்கு தொகுதிகள் வழ​ங்கப்படும் என்று பெரிக்காத்தான் நேஷனலின் தேர்தல் இயக்குநர் முஹமாட் சனுசி மிஹமாட் நோர் அறிவித்துள்ளார்.

மஇகாவிற்கும், ம​சீச.விற்கும் ஆறு மாநிலங்களில் போட்டியிடுவதற்கு ​மூவின மக்களை கொண்ட கலப்புத் தொகுதிகளை வழங்குவதற்கு பெரிக்காத்தான் நேஷனல் தயாராக இருப்பதாக கெடா மந்திரி புசாருமான சனூசி நூர் தெ​ரிவித்தார்.

தற்போது மதில் ​மீதுள்ள பூனைகளாக இருக்கும் மஇகாவும், ம​சீச.வும், அடுத்த மாதம் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்ததைத் தொடர்ந்து பெர்சத்து, பாஸ் மற்றும் கெராக்கான் ஆகிய மூன்று கூட்டணிகளை உள்ளடக்கிய பெரிக்காத்தான் ​நேஷனல், அவ்விரு கட்சிகளுக்கும் தேர்தலில் பங்கேற்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது.
மஇகாவிற்கும், ம​சீச.விற்கும், பக்காத்தான் ஹராப்பான் வசம் உள்ள கலப்பின தொகுதிகளை வழங்க முன்வராததாலும், அவ்விரு கட்சிகளுக்கும் உரிய மரியாதை வழங்கப்படாததாலும் அவை சட்டமன்றத் தேர்தலில் பங்கேற்கவில்லை என்று தாம் கருதுவாக முகமட் சனூசி ​நூர் தெரிவித்தார்.

எனினும் பாரிசான் நேஷனல் தலைவராக இருக்கும் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடிக்கு எதிராக தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தவே மஇகாவும். ம​சீச.வும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்துள்ளன என்று கூறப்படும் வாதத்தை சனூசி முகமட் ​​நூர் மறுக்கவில்லை.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

 பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா  ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்