பெட்டாலிங் ஜெயா, ஜூன் 19-
கட்சித் தாவல் தடுப்பு சட்டத்திலுள்ள பலவீனங்களுக்கு முந்தைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்தேக போக்கே காரணம்.
கட்சி தாவல் நடவடிக்கையை முறியடிப்பதில், அச்சட்டத்தின் ஆக்கப்பூர்வத்தன்மை குறித்து அத்தரப்பினர் சந்தேகங்களைக் கொண்டிருந்ததாக, மக்களவை முன்னாள் தலைவர் டான் ஸ்ரீ அஜர் அஜிசான் ஹாருன் தெரிவித்தார்.
நாட்டில், கூட்டரசு அரசியலைமைப்பு முதன்மை சட்டமாக இருந்தாலும், அது பொதுவான அடிப்படையிலேயே கொள்கையை விவரிகின்றது.
சங்க சுதந்திரம் தொடர்பில், அரசியலைமைப்பில் ஒரு விதியை சேர்த்துக்கொள்வதையே தாம் விரும்புவதாக கூறிய அஜர், கட்சி ஒன்றின் சின்னத்தில் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர் தரப்பினருக்கு ஆதரவளிப்பதை தடுப்பதற்கான சட்டத்தை வரையும் அதிகாரம்,அதன் வழி நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்றார்.
ஆயினும், நாடாளுமன்ற சட்டத்தின் கீழ், அவ்வகை சட்டத்தை இயற்றினால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் போது, அச்சட்டத்தில் எளிதில் திருத்தம் செய்ய முடியும் என அதன் உறுப்பினர்கள் அச்சம் கொண்டிருந்ததாக அஜர் கூறினார்.








