Sep 24, 2026
Thisaigal NewsYouTube
54 நிறுவனங்களிடமிருந்து எந்த நிதி பலனும் பெறவில்லை – ஜனா விபாவா வழக்கில் தெங்கு ஸஃப்ருல் சாட்சி
அரசியல்

54 நிறுவனங்களிடமிருந்து எந்த நிதி பலனும் பெறவில்லை – ஜனா விபாவா வழக்கில் தெங்கு ஸஃப்ருல் சாட்சி

Share:

முன்னாள் நிதி அமைச்சர் தெங்கு டத்தோ ஸ்ரீ ஜப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ், ஜானா விபாவா திட்டத்தில் இடம்பெற்ற 54 நிறுவனங்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் எந்தவித நிதி பலனோ, நன்கொடையோ பெறவில்லை என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.

மேலும், அந்தத் திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட நிறுவனங்கள் பெர்சாத்து கட்சிக்கு அரசியல் நன்கொடை வழங்கியது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்போதைய பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின், ஜனா விபாவா திட்டத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட நிறுவனங்கள் பெர்சாத்துக்கு நிதி வழங்கியதாக ஒருபோதும் தன்னிடம் தெரிவிக்கவில்லை என்றும் ஜப்ருல் தனது சாட்சிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனா விபாவா திட்டம் தொடர்பில், தனது பதவியை தவறாக பயன்படுத்தி பெர்சாத்து கட்சிக்காக 232.5 மில்லியன் ரிங்கிட் நிதியைப் பெற்றதாகக் கூறப்படும் நான்கு அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளையும், 200 மில்லியன் ரிங்கிட் தொடர்பான மூன்று பணமோசடி குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டு வரும் முஹிதீன் வழக்கில் தெங்கு ஜப்ருல் தற்போது சாட்சியமளித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News