Jan 9, 2026
Thisaigal NewsYouTube
துருக்கியிடமிருந்து கிடைக்கப் பெற்ற Order of the Republic விருது அனைத்து மலேசியர்களுக்கும் உரியது: பிரதமர் அன்வார் நெகிழ்ச்சி
அரசியல்

துருக்கியிடமிருந்து கிடைக்கப் பெற்ற Order of the Republic விருது அனைத்து மலேசியர்களுக்கும் உரியது: பிரதமர் அன்வார் நெகிழ்ச்சி

Share:

கோலாலம்பூர், ஜனவரி.08-

துருக்கி அரசாங்கத்தினால் தமக்கு வழங்கப்பட்ட மிக உயரிய விருதான Order of the Republic, அனைத்து மலேசியர்களுக்கும் சமர்ப்பணம் செய்வதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மிகுந்த நெகிழ்ச்சி பொங்க அறிவித்தார்.

இந்த உயரிய கௌரவத்தை நான் எனது தனிப்பட்ட பெயரில் அல்லாமல், ஒட்டுமொத்த மலேசிய மக்களின் சார்பில் மிகுந்த நன்றியுடனும் பணிவுடனும் ஏற்றுக் கொள்கிறேன் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

துருக்கிக்கு மூன்று நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வாருக்கு அந்நாட்டின் அதிபர் Recep Tayyip Erdogan இந்த உயரிய விருதை வழங்கியுள்ளார்.

மலேசியா மற்றும் துருக்கியே இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தியதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால நட்புறவைப் பாராட்டியும் இந்த விருது டத்தோ ஶ்ரீ அன்வாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related News