மலாக்கா மாநிலத்தில் முதலமைச்சர் வேட்பாளராக மாநில அம்னோ தொடர்புக்குழுத் தலைவரும், தஞ்சோங் பிடாரா சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் ரவுப் யூசோ தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி அறிவித்துள்ளார்.
நாளை வெள்ளிக்கிழமை மலாக்கா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக அப்துல் ரவுப் யூசோ பதவி உறுதி மொழி எடுத்துக்கொள்வதற்கு ஏதுவாக அவரின் பெயர், மலாக்கா ஆளுநர் துன் அலி ருஸ்தாமிடம் சார்வு செய்யப்பட்டுள்ளதாக துணைப் பிரதமருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டுள்ளார்.
மலாக்கா முதலமைச்சர் சுலைமான் அலி தமது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து முதலமைச்சர் பதவி காலியானது. 61 வயதான அப்துல் ரவுப் யூசோ , மலாக்கா மாநிலத்தின் 13 ஆவது முதலமைச்சராக பதவியேற்கவிருக்கிறார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
