Oct 1, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் பாரிசான்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் பாரிசான்

மலாக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு, அம்னோ பிரிவு சமர்ப்பித்துள்ள வேட்பாளர் பட்டியலையும், மசீச, மற்றும் மஇகா தரப்பில் முன்மொழியப்படும் வேட்பாளர்களையும் பரிசீலிக்கவுள்ளதாக மாநில பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஶ்ரீ அப் ரவுஃப் யூசோ தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தது மூன்று சாத்தியமான வேட்பாளர்களின் பெயர்களை சமர்ப்பிக்குமாறு அனைத்து அம்னோ தலைவர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில் வேட்பாளர்கள் இதுவரை இறுதி செய்யப்படவில்லை என்றும், முன்மொழியப்படும் பெயர்கள் பல கட்ட பரிசீலனை மற்றும் தகுதிச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கட்சியின் உயர்மட்டத் தலைமைக்கு அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மலாக்கா அம்னோ தற்போது 18 மாநிலத் தொகுதிகளையும், மசீச 2 தொகுதிகளையும், மஇகா ஒரு தொகுதியையும் கொண்டுள்ளது.

மேலும், மாநிலத் தேர்தலுக்கான கட்சி இயந்திரங்களை அனைத்து மட்டங்களிலும் செயல்படுத்துவது குறித்து கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக அப் ரவூஃப் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் வேட்புமனு தாக்கல் தினத்துக்கு முன்னதாக ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் பாரிசான் நேஷனல் தேர்தல் இயந்திரம் தொடங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மாநிலத்தின் 28 தொகுதிகளிலும் பிற கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தத் தயாராகி வருவதால், போட்டியை பாரிசான் நேஷனல் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதையும் அப் ரவூஃப் சுட்டிக் காட்டியுள்ளார்.

கடந்த மாநிலத் தேர்தலில் வென்ற 21 தொகுதிகளையும் தக்கவைத்துக் கொள்வதே தங்களின் முக்கிய இலக்கு என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
பெர்சாத்துவில் இருந்து விலகி புதிய கட்சியில் இணைய ரஸாலி இட்ரிஸ் முடிவு?

பெர்சாத்துவில் இருந்து விலகி புதிய கட்சியில் இணைய ரஸாலி இட்ரிஸ் முடிவு?

மலாக்கா தேர்தல்: பக்காத்தான் ஹராப்பானை கூட்டணிக்கு கட்டாயப்படுத்த முடியாது – அஷ்ராஃப்

மலாக்கா தேர்தல்: பக்காத்தான் ஹராப்பானை கூட்டணிக்கு கட்டாயப்படுத்த முடியாது – அஷ்ராஃப்

இரவு விருந்தில் சந்தித்தாலும் பெர்சாத்துவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை இல்லை - ஃபாஹ்மி ஃபாட்சீல் திட்டவட்டம்

இரவு விருந்தில் சந்தித்தாலும் பெர்சாத்துவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை இல்லை - ஃபாஹ்மி ஃபாட்சீல் திட்டவட்டம்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு: ஆட்சியாளருடன் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் நேரடிப் பேச்சுவார்த்தை

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு: ஆட்சியாளருடன் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் நேரடிப் பேச்சுவார்த்தை

நெகிரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வ வாகனங்களைத் திரும்ப ஒப்படைக்க உத்தரவு

நெகிரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வ வாகனங்களைத் திரும்ப ஒப்படைக்க உத்தரவு

நாடாளுமன்றம் கலைந்ததும் ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து பாரிசான் வெளியேறும் - ஸாஹிட் ஹாமிடி திட்டவட்டம்

நாடாளுமன்றம் கலைந்ததும் ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து பாரிசான் வெளியேறும் - ஸாஹிட் ஹாமிடி திட்டவட்டம்