சிலாங்கூர், ஜூன் 04-
சிலாங்கூர், ஹுலு பெர்னாம் சட்டமன்ற தொகுதிக்கான ஒருங்கிணைப்பாளர் மாற்றப்பட்டதில், தாம் சம்பந்தப்பட்டுள்ளதாக ஹுலு சிலாங்கூர் அமானா கட்சியினர் கூறுவதை, மாநில மந்திரி பெசாரின் செயலாளர் சைபுதீன் ஷாபி முஹம்மது திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருதீன் ஷாரி தலைமையிலான மாநில அரசாங்கத்தின் கூட்ட மன்றத்தில், எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், சிலாங்கூர் சட்டமன்ற அலுவலகம் அந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
சம்பந்தப்பட்ட ஒருங்கிணைப்பாளரை தம்மால் மாற்ற முடிவது உண்மையென்றால், சிலாங்கூர் அரசாங்கத்தின் கூட்ட மன்றத்திற்கு அதிகாரம் இல்லாதது போல் அர்த்தமாகிவிடும் என சைபுதீன் ஷாபி கூறினார்.
இதற்கு முன்பு, ஹுலு பெர்னாம் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் பதவியை வகித்து வந்த, அமானா ஹுலு சிலாங்கூர் தொகுதி துணைத் தலைவர் ரோஸ்லின் எம்டி சின்-னிடமிருந்து அப்பொறுப்பு பறிக்கப்பட்டு, UMNO ஹுலு சிலாங்கூர் தலைவர் முகமது இசா அபு காசிம்-மிடம் வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது.








