Jul 25, 2026
Thisaigal NewsYouTube
இந்தியர்களின் குடியுரிமையை கொச்சைப்படுத்துவதா? பாரிசான் நேஷனலின் துரோகக் கூட்டணியை தோலுரித்த வேட்பாளர் ஜே. அருள்குமார்
அரசியல்

இந்தியர்களின் குடியுரிமையை கொச்சைப்படுத்துவதா? பாரிசான் நேஷனலின் துரோகக் கூட்டணியை தோலுரித்த வேட்பாளர் ஜே. அருள்குமார்

Share:

மலேசிய இந்தியர்களின் பூர்வீக அடையாளத்தையும் குடியுரிமை உரிமையையும் கொச்சைப்படுத்தும் வகையில் பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநரும், பாஸ் கட்சியின் முக்கியத் தலைவருமான சனூசி நோர் பேசியுள்ள இனவாதக் கருத்துக்கள் பல்லின சமூகத்தினிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இத்தகைய இனவாதப் போக்குடைய பாஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டு வைத்துள்ள பாரிசான் நேஷனலின் துரோக அரசியலைத் தோலுரித்துக் காட்டிய நீலாய் சட்டமன்ற தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஜே. அருள்குமார், இனவாத கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் பாரிசான் நேஷனலுக்கு இந்தியர்கள் வாக்களிக்க வேண்டுமா? என்று சற்று ஆவேசமாக வினவியுள்ளார்.

நமது தன்மானத்தையும் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்தையும் அடகு வைக்கும் இத்தகைய துரோகக் கூட்டணியில் உள்ள பாரிசான் நேஷனலுக்கு நெகிரி செம்பிலான் இந்தியர்கள் வாக்களிக்க வேண்டுமா? என்று சிந்திக்க வேண்டும் என்று அருள்குமார் கேட்டுக்கொண்டார்.

Related News